அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள்திங்கள்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி வஉசி துறைமுக மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியைமாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி தொடக்கி வைத்தார். துறைமுக பொறுப்புக் கழகதலைவர் (பொறுப்பு) சு. நடராஜன், செயலர் மோகன், பொருளாளர் ரகுபதி, துறைமுககண்காணிப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், தலைமை பொறியாளர் ரவீந்திரன்உள்ளிட்டோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்தப் போட்டியில் கொல்கத்தா, பாரதீப், மும்பை, விசாகபட்டணம், சென்னை,மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆகிய ஆறு பெரியதுறைமுகங்களின் ஹாக்கி விளையாட்டு அணியினர் பங்கேற்றுள்ளனர்.