திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆசிரியை மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக திமுக பிரமுகர் கைது

தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45).  திமுவைச்சேர்ந்த இவர் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஆவார்.  இவருக்கும் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியையின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ரகுநாதன்அங்கிருந்த ஆசிரியையின்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:12 am

தி. இன்பராஜ்

தூத்துக்குடியில் ஆசிரியை மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக திமுகவைச்சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45).  திமுவைச்சேர்ந்த இவர் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஆவார்.  இவருக்கும் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியையின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ரகுநாதன் அங்கிருந்த ஆசிரியையின் 15 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்றாராம். அந்த பெண் கூச்சல் போட்டதால் ரகுநாதன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக இருந்த ரகுநாதனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.