ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நயினாரகரத்தில் சாலை மறியல்:போக்குவரத்து பாதிப்பு

நயினாரகரத்தில் சனிக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஏராளமான மாடுகள் கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.கடந்த சில மாதங்களாக இந்த சந்தையிலிருந்து வாங்கும் மாடுகளை வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செலவது அதிகரித்துள்ளதாம்.இதன் காரணமாக வாகனங்கள்

Updated On :26 ஜனவரி 2013, 1:09 pm

தென்காசி அருகேயுள்ள நயினாரகரத்தில் மாடு விற்பனையாளர்கள்  மேற்கொண்ட திடீர் சாலை மறியலால் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நயினாரகரத்தில் சனிக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஏராளமான மாடுகள் கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.கடந்த சில மாதங்களாக இந்த சந்தையிலிருந்து வாங்கும் மாடுகளை வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செலவது அதிகரித்துள்ளதாம்.இதன் காரணமாக வாகனங்கள் இல்லாமல் மாடுகளை கால்நடையாகவே கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறதாம்.

அதனால்,வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு மாடுகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வலியுறுத்தி சிறு மாடு வியாபாரிகள் திடீரென்று நயினாரகரம் சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக தென்காசி-மதுரை சாலையி்ல சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன்,இலத்தூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வி ஆகியோர்,மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.