தூத்துக்குடியில் பெண் எரித்துக் கொலை: கணவர் கைது
தூத்துக்குடியில் காதலித்து திருமணம் செய்த மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளியை போலீஸார்


தூத்துக்குடியில் காதலித்து திருமணம் செய்த மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளியை போலீஸார் இன்று கைது செய்தனர்.
தூத்துக்குடி அய்யலுநாயக்கர்தெருவைச் சேர்ந்த முத்துவேல் மகன் சரண்யா(18). அதே தெருவைச் சேர்ந்தவர் சில்வாஸ்டர் மகன் ஜான்சன். இவர்கள், இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஜான்சன் தூத்துக்குடி துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஜான்சனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாகவே ஜான்சன் குடித்துவிட்டு தனது மனைவி சரண்யாவிடம் தகராறு செய்து வந்தாராம். இதானல், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டில் இருந்தபோது வெள்ளிக்கிழமை இரவு ஜான்சனுக்கும், சரண்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, மனைவி சரண்யா மீது மண்ணெண்ணையையை ஊற்றிய ஜான்சன் தீவைத்ததாகக் கூறப்படுகிறது. உடலில் தீ பரவியதால் சரண்யா கூச்சலிட்டுள்ளார்.
இதையெடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் வீட்டுக்குள் சென்றனராம். இருப்பினும், சரண்யா உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தாராம்.
இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜான்சனை இன்று கைது செய்தனர்.
மேலும், சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...