கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு: பல்கலைக்கழக நிர்வாகம் சம்பள குறைப்பையும், ஆட்குறைப்பையும் இல்லை என உறுதிமொழி அளித்துவிட்டு, அதை மீறும் விதமாக தொடர்ந்து ஊழியர்களுக்கு தர வேண்டிய ஈட்டிய விடுப்பு சமர்பிப்புத்தொகை, ஊழியர்களின் சேமநலநிதியிலிருந்து கடன் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை, பொங்கல் போனஸ் மற்றும் இயல்பாக கிடைக்க வேண்டிய சலுகைகள் போன்றவற்றை தராமல் மறுத்து வருகிறது. இதனால் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கரும்பொங்கலாக மாற்றிவிட்டது. எனவே வருகிற ஜன.14-ம் தேதி பொங்கல் தினத்தன்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இல்லத்தின் முன்பு கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம் நடத்துவது.