/

மதுரையில் கேரள வியாபாரிகளிடம் 4 கிலோ நகை கொள்ளை

மதுரையில் கேரள நகை வியாபாரிகளிடம் மிளகாய்ப் பொடி தூவி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:57 am

ஜெயப்பாண்டி

மதுரையில் கேரள நகை வியாபாரிகளிடம் மிளகாய்ப் பொடி தூவி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நகை வியாபாரிகள் ஜோதிரபேல், வினோத்குமார் ஆகிய இருவரும், மதுரை பகுதி நகைக் கடைகளில் ஆர்டர் பெற்று டிசைன் நகைகளை செய்து கொடுக்கின்றனராம்.

இவர்கள் நேற்று தங்கள் ஊரில் இருந்து ஆம்னி பஸ்ஸில் ஏறி மதுரை வந்திறங்கியுள்ளனர். பின்னர் சுண்ணாம்புக் காரத் தெரு வழியாக வந்தபோது, ஒரு மர்ம கும்பல் அவர்கள் இருவர் மீதும் மிளகாய்ப் பொடியைத் தூவி, 4 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றதாகத் தெரிகிறது. இது குறித்து அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

போலீஸார் உண்மையான நகையின் மதிப்பு, கொள்ளைச் சம்பவத்தின் தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.