/

ராமதாஸ் மதுரைக்குள் நுழைய தடை மட்டுமே; வழக்குப் பதிவில்லை: ஆட்சியர்

மதுரை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு வரும் 21ம் தேதி வரை பாமக தலைவர் ராமதாஸுக்கு தடை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது; அவர் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்றார் மாவட்ட

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:57 am

ஜெயப்பாண்டி

மதுரை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு வரும் 21ம் தேதி வரை பாமக தலைவர் ராமதாஸுக்கு தடை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது; அவர் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்றார் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா.

ராமதாஸ் அனைத்து சமுதாயப் பேரவை கூட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்த எந்தக் கட்சிக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமதாஸைப் போல் எந்தத் தலைவர் இவ்வாறு பொது அமைதியைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டாலும் இதுபோன்ற உத்தரவுகள் அவர்களுக்கும் பொருந்தும்.

மற்றபடி சாதிய அமைப்புகள் மாநாடுகள் நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றார் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.