கோவை கல்லூரி நிர்வாகி கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள்
கோவை தனியார் கல்லூரி நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை தனியார் கல்லூரி நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இணைச்செயலராக இருந்தவர் இளங்கோவன் (46). இவர் ஈரோட்டில் மஞ்சள் மண்டியும் நடத்தி வந்தார். வியாபாரம் தொடர்பாக அடிக்கடி ஈரோட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.
24.9.2011-ல் ஈரோடு வந்த அவர், மலையம்பாளையம் அருகே குமாரசாமி கவுண்டன்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது இளங்கோ பயன்படுத்தி வந்த ஜீப்பை யாரோ சிலர் திருட முயன்றார்களாம். அப்போது வெளியே வந்த அவரை, கடத்தி காலிங்கராயன் வாய்க்காலில் பிணத்தை வீசிவிட்டு தப்பிவிட்டார்களாம்.
இது குறித்து மலையம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த பெரியசாமி (21), லோகேஷ் (20), பிரசன்னா (20), சங்கர் (20), ராபின்சன் (20), முகமது தாரிப் (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை ஈரோடு மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சர்வமங்கலா முன்னிலையில் வியாழக்கிழமை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...