ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக உயர்த்தி அரசு உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On :10 பிப்ரவரி 2013, 12:15 pm

தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில்(11) கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 2001 கல்வியாண்டு முதல் தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.அது போல் 2010-11 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித்திட்டதின் கீழ் 218 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.இப்படி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் 2012-2013-ம் கல்வியாண்டில் 6,7,8 வகுப்புக்களுடன் முழுமை பெற்ற நடுநிலைப்பள்ளிகளாக இயங்குகின்றன.எனவே 218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்த தொடக்க கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.

இதனையடுத்து, 2010-11 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 218 தொடக்கப்பள்ளிகள் 2012-13ம் கல்வியாண்டில் முழுமை பெற்ற நடுநிலைப்பள்ளிகளாக இயங்குவதால் அப்பள்ளிகளில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலையுயர்த்தப்படுகிறது.

 அவ்வாறு நிலையுயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களிலிருந்தும்,பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் ஆகிய பணியிடங்களிலிருந்தும் முன்னுரிமை பட்டியலின் படி,பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மூலமாக நிரப்பிக் கொள்ள தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.