ஈரோடில் குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் தொடக்கம்
குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் இன்று காலை தொடங்கப்பட்டது.


குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் இன்று காலை தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் தொடர்பாக அரசியல்வாதிகள் பின்னும் சதிவலையில் விவசாயிகள் சிக்க வேண்டாம் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோடு அருகே பெருந்துறையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூர் வரை குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்துக்கான நிலம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற முன்னோடி திட்டங்களை குஜராத் மாநிலம் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியதால்தான் வளர்ச்சி பெற்று வருகிறது. இதுபோன்ற திட்டங்களால் மக்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எரிவாயுவை கொண்டுச்செல்வது எளிதாகும்.
இப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிறுகளஞ்சி என்னும் இடத்தில் இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்துக்கு ஒரு சில அரசியல் கட்சியினர் தேவையற்ற எதிர்ப்பையும், பீதியையும் கிளப்பி வருகின்றனர். அரசியல்வாதிகள் பின்னும் சதி வலையில் விவசாயிகள் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
நிலம் கையகப் படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீடு குறைவாக இருப்பதாக விவசாயிகள் கருதினால், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இது குறித்து முறையிடலாம்.
அரசின் வழிகாட்டு மதிப்பீட்டில் இருக்கும் அதிகபட்ச தொகையை, இழப்பீடு தொகையாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்துக்கு விவசாயிகள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசியல் கட்சியினர் சிலர் விவசாயிகளை தூண்டிவிடுகின்றனர். விவசாயிகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...