ராஜபட்ச வருகையைக் கண்டித்து உருவ பொம்மையை எரிக்க முயற்சி: 7 பேர் கைது
இலங்கை அதிபர் ராஜபட்ச உருவ பொம்மையை எரிக்க முயன்ற தென்காசி நகர மதிமுகவினர் 7 பேரை தென்காசி போலீசார் கைது செய்தனர்.


இலங்கை அதிபர் ராஜபட்ச உருவ பொம்மையை எரிக்க முயன்ற தென்காசி நகர மதிமுகவினர் 7 பேரை தென்காசி போலீசார் கைது செய்தனர்.
இலங்கை அதிபர் ராஜபட்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்காசி நகர மதிமுகவினர் அவருடைய உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். தென்காசி- திருநெல்வேலி சாலையில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகர மதிமுக செயலர் என்.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தது தொடர்பாக நகரச் செயலர், அவைத் தலைவர் சங்கரமூர்த்தி, இளைஞரணி பீர் முகம்மது, மாணவரணி கார்த்திக், வட்டச் செயலர் பிச்சுமணி, சிவலிங்கம், ரங்கராஜ் ஆகியோரை தென்காசி போலீசார் கைது செய்தனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...