தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டுக்கான கபடி போட்டிகள் பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் காலரி அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி, காலரிஅமைப்பதற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டஅதிமுக செயலரும், தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கிறிஸ்தவ போதகர் ஞானதுரை ஜெபம் செய்து கால்கோலை நட்டுவைத்தார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என். சின்னதுரை, மாநகராட்சி துணை மேயர்பி. சேவியர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் க. விஜயகுமார்,சுரேஷ்குமார், அதிமுக ஒன்றியச் செயலர்கள் சிவசுப்பிரமணியன், ராஜ்மோகன்,அம்மன் டி. நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.