தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி தர்ணா போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் திங்கள்கிழமை

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:30 pm

எஸ். பாண்டியன்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் திங்கள்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் ராமனுஜம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பூமிராஜா, மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன், வட்டார நிர்வாகி சிங்கராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி மூப்பின் அடிப்படையில் வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். வருவாய் கிராம உதவியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் மற்றும் கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.