திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கடலூரில் கிராம உதவியாளர் அடித்துக்கொலை

கடலூர் அருகே கிராம உதவியாளரை அடித்துக்கொன்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு அங்காளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(60). கிராம உதவியாளர். இவர் திங்கள்கிழமை இரவு குடிகாடு அருகே பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு புறப்பட்டுள்ளார். 

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:25 pm

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் அருகே கிராம உதவியாளரை அடித்துக்கொன்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு அங்காளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(60). கிராம உதவியாளர். இவர் திங்கள்கிழமை இரவு குடிகாடு அருகே பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு புறப்பட்டுள்ளார். 

அப்போது எதிரில் வந்த மோட்டர் சைக்கிள், பாலகிருஷ்ணன் மோட்டர் சைக்கிள் மீது மோதியதாகவும், அப்போது மோட்டர் சைக்கிளில் வந்த 3 பேருக்கும், பாலகிருஷ்ணனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாவும் கூறப்படுகிறது.  இதில் 3 பேரும் சேர்ந்து பாலகிருஷ்ணனை தாக்கியுள்ளனர். கீழே விழுந்த அவரை அங்கேயே போட்டுவிட்டு 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.