தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இளைஞர் காவல் படைக்கான உடல் தகுதித்தேர்வு டிச.30-ம் தேதி தொடங்குகிறது

விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் காவல் படையினரை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற டிச.30ம் தேதி தொடங்கி, தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு நடைபெற

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:24 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் காவல் படையினரை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற டிச.30ம் தேதி தொடங்கி, தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தமிழகம் முழுவதும் இளைஞர் காவல் படையினருக்கான தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் எழுத்துத் தேர்வு கடந்த நவ.10-ம் தேதி நடைபெற்றது. அதில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து 6071 பேர் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 5654 பேர் பங்கேற்று தேர்வு எழுதியதில் 1714 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான அடுத்த கட்ட தேர்வான சான்றிதழ் சரிபார்த்தல், உடல் தகுதி தேர்வு மேற்குறிப்பிட்ட நாளில் விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே இத்தேர்வில் பங்கேற்கிறவர்களின் விவரம் தமிழ்நாடு காவல் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் www.tnpolice.in வெளியிடப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலும் பதிவு எண்கள் தகவல் பலகையில் வைத்துள்ளனர். அதோடு, அவரவர் இருப்பிட முகவரிகளுக்கு அஞ்சல் துறை மூலம் கடந்த 17-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் கிடைக்கப்பெறாத தகுதி வாய்ந்தவர்கள் வருகிற 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வேலை நேரத்தில் அழைப்புப் கடிதத்தின் நகலை பெற்றுக் கொள்ளலாம். இதில், அஞ்சல் மூலமாகவோ, நேரடியாக பெற முடியாதவர்கள் இணைதளம் மூலம் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து, அடையாளச் சான்றுகளுடன் உடல் தகுதி தேர்வு மைய அதிகாரியிடம் பார்வையிட்டு உறுதி செய்த பின்னரே உடல் தகுதி தேர்வில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவர். 

இத்தேர்வுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு வந்து விட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் இளைஞர்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.