தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கிராமங்களில் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும்: நீதிபதி பாலகிருஷ்ணன்

விருதுநகர் அருகே கோட்டநத்தம் ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. விருதுநகர் சட்டப்பணிகள் குழு, கோட்டையூர் பிளாரன்ஸ் நைட்டிங்கேள் பெண்கள் மற்றும்

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:22 pm

எஸ். பாண்டியன்

கிராம மக்களிடம் சட்டவிழிப்புணர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நில அகபரிப்பு தடுப்பு பிரிவு நீதிபதி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருதுநகர் அருகே கோட்டநத்தம் ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. விருதுநகர் சட்டப்பணிகள் குழு, கோட்டையூர் பிளாரன்ஸ் நைட்டிங்கேள் பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராமப்புற மேம்பாட்டு தி்டடத்தின் சார்பில் நடந்த முகாமிற்கு வட்டார சட்டப்பணிகள் குழு தலைவர் பிளசட் தாகூர் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தார். மக்கள் நீதிமன்ற உறுப்பினரான அழகுசுந்தரம் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், கிராமங்களில் பொதுமக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அதோடு, கிராம மக்களிடம்  சட்டவிதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டும். அதன் மூலம் சட்டம் குறித்து அறி்ந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

தவறு செய்கிறவர்கள் எப்போதுமே விழிப்புணர்வோடு உள்ளனர். மேலும், பிறப்பு, இறப்பு பற்றி அந்தந்த அலுவலகங்களில் உடனுக்குடன் 21 நாள்களில் பதிவு செய்து விடுவது அவசியம் ஆகும். இதை பதிவு செய்ய தவறிவிட்டால் இலவச ஆலோசனை மையத்தினை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சொத்து மோசடிகளை தவிர்ப்பதற்கும், வில்லங்கம் இல்லாமல் இருக்க வேண்டுமானால் பட்டா ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதோடு, புதிதாக சொத்து வாங்குகிறவர்கள் உடனடியாக வருவாய் துறை அலுவலங்களில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் பிற்காலத்தில் சட்டப்பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் நிலையங்களில் புகாரை பதிவு செய்ய வேண்டும். இதுபோன்று செய்வதன் மூலமே பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

அதையடுத்து, சார்பு நீதிபதி பிளசட் தாகூர், நீதித்துறை நடுவர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் பிரச்னைகள் சம்பந்தமாக பொதுமக்கள மனு அளித்தனர். கோட்டநத்தம் கிராம பொதுமக்கள் சார்பாக பஸ் வசதி கேட்டு மனுக்களை அளித்தனர். இறுதியாக வழக்குரைஞர் காளிமுத்து நன்றி கூறினார். இதில், நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.