தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சாலையோர குடிசைக்குள் புகுந்த டேங்கர் லாரி : தொழிலாளி தலை நசுங்கி சாவு

ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் அண்ணா நகர் பகுதி உள்ளது.  அங்கு குடிசை வீட்டில் வசிப்பவர் கருணாகரன் (46).  இவருடை மனைவி முனியம்மாள் (40),

Updated On :20 டிசம்பர் 2013, 10:16 am

ஆம்பூரில் சாலையோர குடிசைக்குள் டேங்கர் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை இறந்தார்.

ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் அண்ணா நகர் பகுதி உள்ளது.  அங்கு குடிசை வீட்டில் வசிப்பவர் கருணாகரன் (46).  இவருடை மனைவி முனியம்மாள் (40), தாய் புஷ்பா (64), பிள்ளைகள் விஜயகுமார் (19), முரளி (12) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.  வாணியம்பாடி நோக்கி சென்ற டேங்கர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கருணாகரன் வீட்டிற்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்தது.  அதில் தூங்கிக் கொண்டிருந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  முனியம்மாள் மற்றும் புஷ்பா ஆகியோர் காயமடைந்தனர். 

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.