மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து : இளைஞர் பலி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, ஆலம்பாடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சுரேஷ்(19). சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, ஆலம்பாடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சுரேஷ்(19). சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மதியம், தனது சித்தப்பா மகளை தேர்வு எழுவதற்காக சாலையோரம் உள்ள ம.புடையூர் அரசு பள்ளியில் விட்டு விட்டு அங்கிருந்து ஆவட்டி பஸ்நிலையம் நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ராமநத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...