/

அப்பள வியாபாரியை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை தெற்குவாசல் ராமசாமி ஆசாரி சந்து பகுதியைச் சேர்ந்தவர் மதிமோகன் (45). அப்பள வியாபாரி. இவர் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் அப்பளம் விநியோகித்து நேரடியாகச் சென்று அதற்கான

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:20 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த அப்பள வியாபாரி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மதுரை தெற்குவாசல் ராமசாமி ஆசாரி சந்து பகுதியைச் சேர்ந்தவர் மதிமோகன் (45). அப்பள வியாபாரி. இவர் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் அப்பளம் விநியோகித்து நேரடியாகச் சென்று அதற்கான பணத்தை வசூலித்துவந்துள்ளார். இவரிடம் அப்பளமாவை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த தனபாலன் (31) வாங்கி வந்துள்ளார்.

 இந்தநிலையில் கடந்த 2008-ல் மே மாதம்  மதிமோகன் கத்திக்குத்து காயங்களுடன் காந்திமியூசியம் அருகே சாலையோரம் சடலமாகக் கிடந்தார். அவரிடமிருந்து ரூ.2.13 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீஸர் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

   விசாரணையில் காரில் வைத்து தனபாலனும், ராமமூர்த்தியும் சேர்ந்து மதிமோகனைக் கொன்று பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

  தனபாலன், ராமமூர்த்தியைக் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது மதுரை 6-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்குரைஞர் என்.சிவமுருகன் ஆஜரானார். சாட்சிகள் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட தனபாலன், ராமமூர்த்திக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி எஸ்.சரவணப்பெருமாள் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.