இளைஞர் காவல் படையினருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித்தேர்வு
தமிழகம் முழுவதும் இளைஞர் காவல் படையினருக்கான தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கான


விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் காவல் படையினருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் உடல் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது.
தமிழகம் முழுவதும் இளைஞர் காவல் படையினருக்கான தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கான உடற்தகுதி தேர்வு இம்மாதம் கடைசி வாரத்தில் குறிப்பிட்ட நாள்களில் நடைபெற இருக்கிறது. இதில், 1500 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், உயரம் மற்றும் மார்பளவு, கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், நின்று நீளம் தாண்டுதல் உள்ளிட்ட உடல் தகுதி தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதில், குறிப்பிட்ட அளவில் புள்ளிகள் பெற வேண்டும். அதற்காக, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆயுதப்படை மைதானத்தை தயார் நிலையில் இருக்க வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் காவல் படை 320 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணியிடத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6071 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான கடந்த நவ-10ம் தேதி நடந்த எழுத்துத் தேர்வில் 5654 பேர் பங்கேற்றனர். தற்போது, இதில் 1714 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு இம்மாதம் இறுதிக்குள் குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிறது.
இத்தேர்வு குறித்து தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உடற்தகுதி தேர்விற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட இருக்கிறது. இத்தேர்வு நடத்த முன்னேற்பாடக உபகரணங்கள் மற்றும் மாவட்ட ஆயுதப்படை மைதானம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...