தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான பயிற்சி முகாம்

பள்ளி மேலாண்மை குழுவில் உறுப்பினர்களாக தலைமை ஆசிரியர், 9,10 ஆகிய வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் அந்தந்த பகுதியில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:17 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.

பள்ளி மேலாண்மை குழுவில் உறுப்பினர்களாக தலைமை ஆசிரியர், 9,10 ஆகிய வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் அந்தந்த பகுதியில் ஊராட்சியின் உறுப்பினர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பள்ளியின் நிர்வாகத்தை திறமையாக நடத்த வேண்டும். அதன் அடிப்படையிலேயே இரண்டு நாள் பயிற்சி முகாம் 16 மையங்களில் நடைபெற இருக்கிறது. இதில் ஒவ்வொரு மையங்களிலும் தலா 50 பேர் வீதம் பங்கேற்க இருக்கிறார்கள்.

இம்முகாமில் மேலாண்மை குழுவினரின் பங்கு குறித்தும், கிராமங்களில் பள்ளியை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பள்ளிக்குத் தேவையானவைகளை வெளியில் பொதுமக்கள் ஆர்வலர்களிடம் இருந்து பெற்று பூர்த்தி செய்தல் போன்றவைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதில், முதல் கட்டமாக விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய மையங்களில் டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற இருக்கிறது. அதையடுத்து, மீதமுள்ள மையங்களில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட இருக்கிறது.

இப்பயிற்சி முகாமிற்கு கருத்தாளர்களாக தலைமையாசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஆகியோர் பயிற்சி அளிக்க இருப்பதாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அலுவலர் அதியமான் தெரிவித்தார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.