தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு சாவு

தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகள் லத்திஜா(20). இவர் விருதுநகர் அருகே மத்திசேனைப் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:16 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பொறியியல் பட்டதாரி மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகள் லத்திஜா(20). இவர் விருதுநகர் அருகே மத்திசேனைப் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த வாரம் தேர்வு நடைபெற இருக்கிறது. அதனால், படிப்பதற்காக விடுமுறை என்பதால் லத்திஜாவும் சொந்த ஊருக்குச் சென்று விட்டு, சனிக்கிழமை மாலையில் கல்லூரி விடுதிக்கு திரும்பி வந்தாராம்.

இன்றும் வழக்கம் போல் எழுந்து விடுதியில் இருந்த மாணவ, மாணவிகள் சாப்பிடச் சென்றாராம். அதையடுத்து பிற்பகல் அனைவரும் உணவு கூடத்துக்கு  அழைத்துள்ளனர். ஆனால், மறுத்துவிட்டு விடுதி அறையிலேயே இருந்து அடைத்துக் கொண்டாராம். பின்னர் மாணவ, மாணவிகள் வந்து ஜன்னல் வழியாக பார்க்கையில் உத்தரத்தில் தூக்கிட்டுக் கொண்டாராம். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து போலீஸார் அறையை திறந்து பார்க்கையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், தேர்வு நடைபெற இருப்பதால் மன உளைச்சல் அடைந்ததாகவும், அதனால் என்னுடைய சாவுக்கு யாரும் காரணமில்லை என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

அதையடுத்து, போலீஸார் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.