புதுகை அருகே ஞாயிறு அதிகாலையில் நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் பலி
புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நேரிட்ட சாலை விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 3


புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நேரிட்ட சாலை விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த வர்த்தகர் சங்கத்தலைவர் அப்துல்அமீது மகன்கள் ஜகுபர்அலி(39), ராஜாமுகமது(31) ஆகியோர் வியாபார நிமி்த்தமாக (டாடா ஏஸ்) மினிவேனில் திருச்சிக்கு சென்றுவிட்டு அதிகாலையில் கோட்டைப்பட்டினம் திரும்பிக்கொண்டிருந்தனராம். கீரனூர் அருகே காட்டு அய்யனார் கோவில் பகுதியில் வந்தபோது பின்புறம் வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியதால் வேன் சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே ஜகுபர்சாதிக், ராஜாமுகமது மற்றும் திருச்சி கல்லணையைச் சேர்ந்த வேன் ஓட்டுனர் ஷேக்தாவூத்முகமது(49) ஆகியோர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மணமேல்குடி அருகே இடையாத்திமங்கலத்தைச் சேர்ந்த முத்துக்குமார்(28) என்பவர் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நேரிட்ட இடத்தில் நின்றுகொண்டிருந்த உதவி ஆய்வாளர் மீது வேன் மோதி கால் முறிவு:
இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடததுக்குசென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த மினி வேன் மோதியதால் கால் முறிவு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கீரனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரி்த்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...