மருந்து வாங்குவதற்காக திருட முயன்ற இளைஞர் கைது
விருதுநகர்-சிவகாசி சாலையில் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(31). இவர் மத்திசேனைப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். அதோடு, சர்க்கரை நோயால்


விருதுநகர் அருகே நோய்க்கு மருந்து வாங்குவதற்காக வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சி செய்த போது கையும், களவுமாக இளைஞர் ஒருவர் புதன்கிழமை பிடிபட்டார்.
விருதுநகர்-சிவகாசி சாலையில் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(31). இவர் மத்திசேனைப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். அதோடு, சர்க்கரை நோயால் நாள் தோறும் அவதிப்பட்டு வந்த நிலையில் மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டும். இதற்கு போதிய பணவசதியில்லாத நிலையில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்காக திருட திட்டமிட்டு, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் வீட்டை தேர்வு செய்துள்ளார்.
செவ்வாய்கிழமை இரவில் பாலசுப்பிரமணியம் வீட்டிற்கு முன்பு போய் கேட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். அங்கு, வெளியே மோட்டாரை போட்டுள்ளார். உள்ளேயிருந்து அவரது மனைவி செல்லம்மாள் வர, அந்த இடைவெளியில் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அதையடுத்து, அசதியாக இருக்கவே அங்கேயே தூங்கியுள்ளார். அதிகாலையில் எழுந்து பீரோ இருக்கும் அறையை நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது இருட்டில் சட்டி, பானை ஆகியவைகள் உருண்டு சத்தம் கேட்டுள்ளன. இதனால், அதிர்ச்சி அடைந்து அந்த அறைக்குச் சென்று இருட்டில் மறைந்திருந்த நாகராஜனை கையும் களவுமாக பாலசுந்தரமும், அவரது மனைவியும் பிடித்தனர். கிராம மக்களும் சத்தம் கேட்டு எழுந்து வந்தனர். அதோடு, காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் பாலசுந்தரம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் நாகராஜன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...