இதில், துணை சுகாதார நிலையங்களில் ஸ்டாப் நர்சுகளை நியமனம் செய்யக் கூடாது. கிராம சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் போதிய அளவில் இல்லை, அதனால் சங்க கோரிக்கையினை அரசு ஏற்றுக்கொண்ட படி வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். பகுதி நேர சுகாதார செவிலியர்களின் தர ஊதியத்தை உயர்த்தி வழங்குவதோடு, ஒவ்வொருவருக்கும் மடிக்கணினியும் வழங்க வேண்டும். பெண் ஊழியர்கள் என்பதால் கூடுதலான பணிகளைத் திணிப்பதை கைவிடவும் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.