தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே வீட்டுக் காவலாளியை தாக்கியதாக 2 போலீஸ்காரர்கள் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், ரவிசந்திரன் ஆகிய இருவரும் சகோதரர்களாக ஆவார்கள். அதோடு, இருவருமே காவல் துறையில் போலீஸார்களாக பணியாற்றி

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:08 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே சம்பளம் கேட்ட வீட்டுக் காவலாளியை தாக்கியதாக 2 போலீஸார்கள் மீது சூலக்கரை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், ரவிசந்திரன் ஆகிய இருவரும் சகோதரர்களாக ஆவார்கள். அதோடு, இருவருமே காவல் துறையில் போலீஸார்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் புதிதாக வீடு அமைப்பதற்குரிய கட்டட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அதோபோல், இதே பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ்(50). இவர் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு பாதுகாவலளராக இருந்து வருகிறார். மேலும், இவர்கள் வீட்டையும் சேர்த்து பாதுகாத்து வருகிறார். அதோடு, இவருக்கு உணவுடன் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பி வேலைபார்த்து வந்த நிலையில் குறிப்பிட்ட இருவரிடமும் சம்பளம் கேட்டாராம்.

ஆனால், அவர்கள் சம்பளம் தர மறுத்ததோடு, தரக்குறைவாக பேசி இருவரும்  தாக்கினார்களாம். இது தொடர்பாக பாக்கியராஜ் விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை செய்த மாஜிஸ்திரேட் கோபாலகிருஷ்ணன் போலீஸ்காரர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விருதுநகர் சூலக்கரை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.