தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வத்திராயிருப்பு அருகே கல்குவாரியின் உரிமத்தை ரத்துச் செய்யக் கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

வத்திராயிருப்பு அருகே கல்குவாரியில் வெடி வைப்பதால் பழமையான திருக்கோயில் இடிந்து விழும் நிலை இருப்பதால், இக்கல்குவாரிக்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்பதை

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:04 pm

எஸ். பாண்டியன்

வத்திராயிருப்பு அருகே கல்குவாரியில் வெடி வைப்பதால் பழமையான திருக்கோயில் இடிந்து விழும் நிலை இருப்பதால், இக்கல்குவாரிக்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது மூவறைவென்றான். இக்கிராமம் அருகே மொட்டமலையில் மலைகொழுந்தீஸ்வரர்-மரகதவல்லி ஆலயம் உள்ளது. இக்கோயில் இந்த மாவட்டத்தில் பாண்டியர் கால ஒரு குடவரைக்கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள மலையை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கல்குவாரி நடத்துவதற்கு கனிமவளத்துறை சார்பில் ஏலம் விடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அய்யனார்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் கலைச்செல்வி தலைவியாக கொண்டு செயல்படும் மகளிர் குழுவும், மூவறைவென்றான் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் தலைமையில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவும் சேர்ந்து கையால் உடைப்பதாகக் கூறி குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்துள்ளனர். தற்போது இவர்கள் நடத்தாமல் இக்கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி தலைமையில் செயல்படும் குழு மற்றும் கல்குவாரி நடத்துகிறவர்கள் ஆகியோரிடம் கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டு நடத்த அனுமதித்துள்ளனர்.

இவர்கள் தொழிலாளர்களைக் கொண்டு கையால் உடைக்காமல் வெடிமருந்துகள் கொண்டு பாறைகளை தகர்க்கின்றனர். இதனால், மிகவும் பழமையான கோயிலான   மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் தென்பகுதி இடிந்துள்ளது. இது குறித்து அப்போது கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 26.2.2013 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மறுபடியும் அனுமதி அளித்ததுள்ளனர். எனவே மலைப்பகுதியில் உள்ள கல்குவாரிகளை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர். 

அதோடு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதோடு, அப்பகுதியை ஆன்மிக தலமாகவும் அறிவிக்கவும் என ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு சூலக்கரை போலீஸார் விரைந்து வந்தனர். பின்னர், விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட அமைப்பாளர் சரவணக்குமார் தலைமையில் கிராமத்தைச் சேர்ந்த குழுவினர் ஆட்சியர் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமியிடம் மனுவை அளித்தனர். அவர் உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.