விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வில் 16695 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். மேலும், இத்தேர்வு நடைபெறும் மையங்களில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-2ல் அடங்கும் பணிகளுக்கான சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர்-நிலை-2 அலுவலர், நிதித்துறை உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் துறையில் அலுவலர் உள்ளிட்ட 19 வகையான காலிபணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தேர்வு விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர்-4685 பேரும், அருப்புக்கோட்டை- 4586 பேரும், ராஜபாளையம்-4289 பேரும், சிவகாசியில் 4090 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர்-3641 பேரும் என மொத்தம் 21291 பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவற்காக 42 மையங்களில் அமைத்திருந்தனர். இத்தேர்வை மொத்தம் 16695 பேர்கள் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். அதில், 4596 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இத்தேர்வு நடைபெறும் ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.
இதில், விருதுநகர்-அழகாபுரி சாலையில் உள்ள ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கு தரைதளத்தில் எளிதாக வந்து செல்லும் வகையில் தரைதளம் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். இத்தேர்வு குறித்து செங்குன்றாபுரம் முதுகலை பட்டதாரி ராஜேஷ் என்பவர் கூறுகையில், தமிழில் வினாக்கள் அனைத்தும் எளிதாகவே இருந்தது. ஆனால், அறிவியல் வினாக்கள் பாடங்களின் உள்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல், கணக்கும் கடினமாகவே இருந்ததாக குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்
அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!
வீடியோக்கள்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

