தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத வாகன மோதி ஒருவர் சாவு

விருதுநகர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கிடசாமி என்பவரின் மகன் ஆர்.ஜெகதீசன்(50). இவர் சனிக்கிழமை விருதுநகருக்கு தனது சொந்த வேலையின் காரணமாக வந்து அழகாபுரிக்கு

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:03 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத வாகன மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கிடசாமி என்பவரின் மகன் ஆர்.ஜெகதீசன்(50). இவர் சனிக்கிழமை விருதுநகருக்கு தனது சொந்த வேலையின் காரணமாக வந்து அழகாபுரிக்கு திரும்பி சென்று  கொண்டிருந்தாராம். அப்போது, விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே வந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாடுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, அருகில் உள்ள சூலக்கரை காவல் நிலையத்திற்கு பாதாசாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் காயம் அடைந்தவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இது தொடர்பாக உயிரிழந்தவரின் உறவினர் அழகர்சாமி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.