எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குள்பட்ட அரங்கமங்கலம் ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாழுமுனி. இவர் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வதாக,

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:26 pm

VASUDEVAN.K

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குள்பட்ட அரங்கமங்கலம் ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாழுமுனி. இவர் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வதாக, பெற்றோர் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் குணசேகரன், நலத்துறை வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை அளித்தனர். அதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் வாழுமுனியை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.