இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய ரயில்வே இணையமைச்சர் அஜில்ரஞ்சன்சவுத்ரி, மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தங்கள் தொகுதியில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு வலியுறுத்தியிருந்தீர்கள். இக்கோரிக்கை பற்றி ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கவனத்துடன் பரிசீலனை செய்தனர். அதன் அடிப்படையில் இக்கடிதத்தி்ல் தெரிவிக்க விரும்புகிறேன். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் லெவல் கிராமசிங் வழியாக கடந்த 2012-நவம்பர் மாதம் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் குறைந்த வாகனங்களே கடந்து சென்றுள்ளன. குறைந்தபட்சம் 1 லட்சம் யூனிட் வாகனங்கள் கடந்து செல்ல வேண்டும். ஆனால், இந்த லெவல் கிராசிங் வழியாக 60 ஆயிரத்து 160 யூனிட் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. ஆனாலும், இப்பகுதியில் உள்ள மக்கள் மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.