/

விருதுநகரில் ஜி.கே.மூப்பனார் நினைவு ஜோதி ரதயாத்திரைக்கு வரவேற்பு

தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 12-ம் ஆண்டு நினைவு ஜோதிரதயாத்திரையை கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஜி.ரமேஷ்குமார் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் விடியல் சேகர்,

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:25 pm

எஸ். பாண்டியன்

விருதுநகரில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 12-ம் ஆண்டு நினைவு ஜோதி ரதயாத்திரையை பூரண கும்ப மரியாதையுடன் காங்கிரஸார் செவ்வாய்கிழமை இரவு வரவேற்பு அளித்தனர்.

தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 12-ம் ஆண்டு நினைவு ஜோதிரதயாத்திரையை கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஜி.ரமேஷ்குமார் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் விடியல் சேகர், காங்கிரஸ் நிர்வாகி எம்.ஏ.அமிர்கான் ஆகியோர் தலைமையில் காளியக்காவிளையில் தொடங்கி, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர் வழியாக விருதுநகருக்கு செவ்வாய்கிழமை இரவு வந்தது. சாத்தூரில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.கணேசன் தலைமையிலும், பாண்டி முன்னிலையிலும் சிறப்பான வரேவற்பு அளிக்கப்பட்டது.

அதேபோல் விருதுநகரில் ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அ.சாரதா விஜயகுமாரி முன்னிலையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட பொதுச்செயலாளர் டைகர் சம்சுதீன், ராஜபாளையம் நிர்வாகி ராஜலிங்கராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏ.கே.பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வரத்தினம், பேபி, முன்னாள் சசிகலா ஆகியோர் ஜி.கே.மூப்பனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.