இந்நிலையில் இருபிரிவினருக்கான பொது மயானப்பாதை 7.5 ஏக்கர் நிலம் உள்ளது. இக்குறிப்பிட்ட இடம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் நிலையில், வருவாய்த்துறை ஆவணங்களிலும் மயானம் என குறிப்பிடப்பட்டள்ளது. அதோடு, இக்குறிப்பிட்ட பாதை வழியாகத்தான் கிராம மக்கள் தங்களுக்கு தோட்டங்களுக்கு செல்வதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தார்ச்சாலையும் அமைத்து கொடுத்துள்ளனர். தற்போதும், இப்பாதையில் குண்டு குழியுமாக இருப்பதாலும் சாலை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பாதையோரத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி நாயக்கர் என்பவரின் மகன் பாண்டியனுக்கு சொந்தமான 11 சென்ட் இடம் உள்ளது. இந்நிலத்தின் மேற்கு பகுதி மயாணத்திற்கு செல்லும் பாதை அமைந்துள்ளது. இதைக் காரணமாக கூறி இரவோடு இரவாக பாதை உள்ளிட்டவைகளை உழுது பாதையில்லாத நிலையை உருவாக்கியுள்ளார். மேற்குறிப்பிட்ட நபர் இந்த ஊராட்சியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மயானத்திற்கு செல்லும் வழியில் மற்ற பிரிவினர் அனைவரும் பாதைக்கு வழிவிடுவதற்கு தயாராக இருப்பதாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.