விருதுநகர் வட்டார விவசாயிகள் கவனத்திற்கு
விருதுநகர் வட்டாரத்தில் நிகழாண்டில் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு குறிப்பிட்ட நாளில் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என வேளாண்மை துறையினர் கேட்டுக்


விருதுநகர் வட்டாரத்தில் நிகழாண்டில் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு குறிப்பிட்ட நாளில் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என வேளாண்மை துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநர் கல்யாணசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் வட்டார பகுதியில் விவசாயிகள் போதிய மழையில்லாமல் வறட்சியால் பயிர் சாகுபடி பாதிக்கப்படும் நிலையேற்பட்டு வருகிறது. அதனால், நஷ்டமடைந்த திரும்ப கிடைப்பதற்கு ஒவ்வொரு பிர்க்காவிலும், பகுதி வாரியாக பயிருக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் ஓண்டிப்புலிநாயக்கனூர் பகுதியில் நெல், மக்காச்சோளம், வாழை, பாசிப்பயறு, வச்சக்காரப்பட்டி பகுதியில் நெல், மக்காச்சோளம், உளுந்து, பாசிபயறு, நிலக்கடலை மற்றும் பருத்தி பயிர்களுக்கும், ஆமத்தூர் பகுதியில் நெல், மக்காச்சோளம், பாசிப்பயறு மற்றும் பருத்தி பயிர்களுக்கும் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே அதன் அடிப்படையில் நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.12,944-க்கு பிரிமியம் தொகையாக வருகிற டிச.15-ம் தேதிக்குள் ரூ.116 செலுத்த வேண்டும். அதேபோல், மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.10284-வீதம் பிரீமியம் தொகையாக ரூ.116ம், உளுந்து பயிர் ஏக்கருக்கு ரூ.4608-க்கு பிரீமியம் தொகையாக ரூ.52ம், பாசிப்பயறு ஏக்கருக்கு ரூ.2884-க்கு பிரீமியம் தொகையாக ரூ.32ம், நிலக்கடலை பயிர் ஏக்கருக்கு ரூ.15380-க்கும் பிரீமியம் தொகையாக 242ம், சூரியகாந்தி பயிர் ஏக்கருக்கு ரூ.17080-க்கு பிரீமியம் தொகையாக 269ம் என வருகிற செப்-15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதேபோல், பருத்தி சாகுபடி ஏக்கருக்கு ரூ.4496-க்கு பிரீமியம் தொகையாக ரூ.257ம் வருகிற அக்-15ம் தேதிக்குள் அந்தந்த பகுதி வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கல்யாணசுந்தரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...