விருதுநகர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வை 48254 பேர் எழுதினார்கள்
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இத்தேர்வு எழுதுவதற்காக 54,668 பேர்கள்


விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வை 48254 பேர் தேர்வு எழுதினார்கள்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு இனறு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இத்தேர்வு எழுதுவதற்காக 54,668 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 119 தேர்வு மையங்களில் இத்தேர்வை 48,254 பங்கேற்று தேர்வு எழுதினார்கள். இதில், 6434 பேர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
இத்தேர்வு நடைபெற்ற மையங்களில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தேர்வாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் ஒழுங்காக நடைபெறுகிறதா என்பது குறித்து விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அதேபோல், அருப்புக்கோட்டை எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எஸ்.ஆர்.ராமசாமி நாயுடு நினைவுக் கலைக்கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நேரிடையாக சென்று ஆய்வு செய்தார். அப்போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அருமைநாயகம் வரகுணராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இத்தேர்வு குறித்து விருதுநகரைச் சேர்ந்த ஆசிரியர் பட்டயதாரி முகமது நபீஸ் என்பவர் கூறுகையில், சமச்சீர் பாடப்பிரிவுகளில் கேள்விகள் அனைத்தும் பத்திகளுக்குள்ளே இருந்தே கேள்விகள் இருந்தது. அதிலும், கணிதம், அறிவியல் பாடங்களிலும் மற்றும் பொது அறிவு வினாக்கள் பகுதியில் கேள்விகள் அனைத்தும் எதிர்பார்க்காத வகையில் கடினமாக இருந்ததாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...