மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை: ஆணையாளர்
விருதுநகர் நகராட்சி அலுவலக வளாகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் மா.சாந்தி தலைமை வகித்தார். ஆணையாளர் மணி மற்றும் நகராட்சி துணைத்தலைவர் மாரியப்பன்


விருதுநகர் நகராட்சியில் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மணி தெரிவித்தார்.
விருதுநகர் நகராட்சி அலுவலக வளாகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் மா.சாந்தி தலைமை வகித்தார். ஆணையாளர் மணி மற்றும் நகராட்சி துணைத்தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு: நகராட்சி பகுதிகளில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுத்து வருகின்றனர். இதனால் குடிநீரை பிரித்து விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல், 15,16 ஆகிய வார்டுகளில் உள்ள தண்ணீர் குழாய் இணைப்பை 18-வது வார்டுக்கும் சேர்த்து கொடுத்துள்ளனர். இதனால், ஏற்கனவே குறைவாக வந்து கொண்டிருந்தது. இனிமேல் உப்பு நீர் கூட எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படப்போவதாக கூறினார்.
நகராட்சிப் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெற இருக்கும் இடத்தை நேரில் பார்த்து விட்டு பொறியாளர் திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு மராமத்து பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபள்ளியில், இரண்டு வகுப்பறைகள் இடிந்து விழும் நிலையிலிருப்பதற்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றார்.இந்நகராட்சியில் உள்ள பிரசவ மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு டாக்டர் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். அதேபோல், உள்ளே நோயாளிகள் கட்டில் இருக்கைகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. இதன் மூலம் சுற்றுப் பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் பயனடைந்து வந்தனர். அதனால், விரைவில் மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக பெண்கள் குழந்தைகளுடன் கூட்டமாக வந்து காத்திருக்கின்றனர். அதனால், இனிமேல் காலதாமதம் இல்லாமல் உடனே வழங்க அலுவலர்கள் ஏற்பாடு செய்வது அவசியம் என்றனர்.
வாகனங்கள் மற்றும் குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படாமல், அந்தந்த பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் ஏலம் விட வேண்டும். அதேபோல் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு நகராட்சியிலிருந்து மனுக்கள் பெற்றதற்கான ரசீது வழங்க வேண்டும்.பழைய பஸ்நிலையத்தில் உள்ளே, வெளியே செல்லும் வழிகள் குறுகிய நிலையில் இருப்பதால் பஸ்கள் வந்து செல்வதற்கு சிரமம் இருக்கிறது. அதனால் அதை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதற்கு தலைவர் மா.சாந்தி பதிலளித்து பேசுகையில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் பகுதியில் நேரடியாகச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்த பி்ன்னரே திட்ட மதிப்பீடு தயார் செய்வார்கள். பிரசவ மருத்துவமனையில் நகராட்சி துறையின் இயக்குநரிடம் அனுமதி பெற்ற பின் மருத்துவரை நியமனம் செய்யப்படும். பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்தில் கணிப்பொறி பழுதாக இருப்பதால் தாமதம் ஏற்படுவதாகவும் அதை உடனே சரிசெய்து விரைவாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
அதேபோல், நகராட்சி ஆணையாளர் மணி கூறுகையில், குடிநீரை மோட்டார் வைத்து எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, குடிநீர் பொதுமக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்கும் வகையில் சீராக விநியோகிக்கப்படும். அதேபோல், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக நகராட்சி மூலம் ரசீது வழங்குவதற்கு தகவல் மையம் தொடங்கப்படும், வாகனங்களின் புத்தகம் இல்லாமல் உள்ளது. அதனால், ஏலம் விடுவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் முக்கிய வளர்ச்சி பணிகள் மற்றும் வரவு செலவு திட்ட தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. இதில், அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...