சென்னை அருகே குன்றத்தூரைச் சேர்ந்தவர் பொன்னுபாண்டியன்(45). இவர் மரக்கடை தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் மனைவி சக்தி(40), மகள்கள் கவுசிகா(17), மன்சிகா(17) ஆகியோருடன் தூத்துக்குடி அருகே ஜக்கம்மாள்புரத்திற்கு குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக காரில் திங்கள்கிழமை இரவு சென்னையில் புறப்பட்டனர். இக்காரை சென்னைப் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் அன்பழகன்(24) என்பவர் ஓட்டினாராம். அருப்புக்கோட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அருகே வரும் போது முன்புறம் சென்ற கண்டெய்னர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதியது. இதில், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து முன்புறம் அமர்ந்திருந்த பொன்னுப்பாண்டியன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.