பூட்டியிருந்த வீட்டில் 33 சவரன் நகை திருட்டு
விருதுநகர் என்.ஜி.ஓ காலனியில் முல்லைத்தெருவைச் சேர்ந்தவர் ராமனுஜம்(50). இவர் இப்பகுதியில் உள்ள டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராணி(43)பெரியவள்ளிக்குளம் தனியார்


விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டின் பின்புற ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து 33 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் என்.ஜி.ஓ காலனியில் முல்லைத்தெருவைச் சேர்ந்தவர் ராமனுஜம்(50). இவர் இப்பகுதியில் உள்ள டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராணி(43)பெரியவள்ளிக்குளம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவரும் திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டுச் சென்றனர். அதேபோல், ராமனுஜம் மதிய உணவுக்காக வீட்டிற்கு 2 மணிக்கு வந்துள்ளார்.
அப்போது, கதவை திறந்து பார்க்கையில் பினபுற ஜன்னல் கம்பிகள் உடைந்து கிடந்துள்ளது. அதற்கருகே பீரோவும் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவில் இருந்த 33 சவரன் தங்கநகை பொருள்களும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக ராமனுஜம் விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...