அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சாவு
அரியலூர்மாவட்டம், நெரிஞ்சிக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்,இவரது மனைவி சரோஜா(55) இவர்களது மகன் திருநாவுக்கரசு(36)


அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் இறந்தார்.
அரியலூர்மாவட்டம், நெரிஞ்சிக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்,இவரது மனைவி சரோஜா(55) இவர்களது மகன் திருநாவுக்கரசு(36)
திங்கள்கிழமை(ஆக.12) சரோஜா தனது மகள் செந்தமிழ்ச்செல்வி வீட்டுக்குச் செல்வதற்காக விளாங்குடி சென்றார். பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்றபோது அவர் மீது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரோஜா அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார். இது குறித்து திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கணேஸ்குமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...