கூட்டத்தில் மதுரை மேயர் வி.ராஜன்செல்லப்பா, புதுதில்லியின் தமிழக சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், முத்துராமலிங்கம், கே.தமிழரசன், கருப்பையா, தமிழரசன், தேமுதிக சுந்தரராஜன் மற்றும் துணைமேயர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக அதிமுக பேச்சாளர் ஜி.பாண்டியன் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. பாசறை மதுரை மாநகர் மாவட்டச் செயலர் டி.வினோத்குமார் வரவேற்றார். முத்துசாமி உறுதிமொழி வாசித்தார். மனோகரன் தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றச்செய்தார். பாசறை நிர்வாகிகள் சோலையழகுபுரம் வீர.சுதாகர், சி.ராஜூ உள்ளிட்டோர் நன்றி கூறினர்.