தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆம்பூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது. விஜயபாரத மக்கள் கட்சியைச் சேர்ந்த 22பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :10 ஆகஸ்ட் 2013, 9:10 am

ஆம்பூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்த முயன்ற விஜயபாரத மக்கள் கட்சியை சேர்ந்த 24 பேரை ஆம்பூர் டவுன் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் ஈடிகர் தெரு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.  இந்த குறுகிய தெரு வழியாக நாகநாத சுவாமி திருக்கோயில், இந்து ஆரம்பப் பள்ளி, ஆம்பூர் பஜார் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.  டாஸ்மாக் கடை முன்பு மது அருந்திவிட்டு பலர் அந்த தெருவின் நடுவிலேயே நின்று கொள்கின்றனர்.  தெரு மிகவும் குறுகியதாக இருப்பதால் மது அருந்திக் கொண்டிருப்பவர்களை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.   குறிப்பாக பெண்கள் அவ்வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.  ஆனால் வேறு வழியில்லாமல் அந்த வழியை அவர்கள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரி பல மனுக்களை அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  அதையொட்டி அப்பகுதியில் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.    அந்நிலையில் சனிக்கிழமை காலை விஜயபாரத மக்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் குமரன், தலைமை நிலைய பேச்சாளர் கோபிநாதன், மாவட்ட பொறுப்பாளர்கள் கஜேந்திரன், ஹரிகிருஷ்ணன், மாதனூர், பேர்ணாம்பட்டு ஒன்றிய நிர்வாகிகள் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர்.  அதனால் போலீஸார் அக்கட்சியை சேர்ந்த 24 பேரை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.