டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விழுப்புரம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் படுகாயம்

விழுப்புரம் அருகே சிந்தாமணியில் அரசுப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:31 am

சா. ஜெயப்பிரகாஷ்

விழுப்புரம் அருகே சிந்தாமணியில் அரசுப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, விழுப்புரம் சிந்தாமணி அருகே வந்தபோது, பஸ்ஸை முந்திச் செல்ல வேகமாக வந்த லாரிக்கு வழிவிடும்போது சாலையோரப் பள்ளத்தில் சரிந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில்  ஓட்டுநர் சுருளிவேல், நடத்துனர் சங்கர்ராமன், பயணிகள் கரூர் ராதிகா, மதுரையைச் சேர்ந்த கதிர்வேல், பாண்டியராஜன் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் 29 பேருக்கு லேசான காயம்  ஏற்பட்டது. இந்தப் பேருந்தில் 39 பேர் பயணித்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.