வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்: ஆயுதப் படை போலீஸார் உள்ளிட கும்பலிடம் விசாரணை

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கடத்தப்பட்டு மிரட்டப்பட்ட விவகாரத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் உள்ளிட்ட கும்பலிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:31 am

ஜெயப்பாண்டி

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கடத்தப்பட்டு மிரட்டப்பட்ட விவகாரத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் உள்ளிட்ட கும்பலிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரையில் கூடல்நகர் ரயிலார்நகர் கம்பராஜன் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவரை இரு நாள்களுக்கு முன்னர் மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திக்கொண்டு ராஜபாளையம் பகுதிக்குச் சென்றது. அவரிடம், அவரை விடுவிக்க வேண்டுமானால்,  ரூ. 5 லட்சம் வரை  தரவேண்டும் என்று கேட்டு துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இதனிடையே கம்பராஜனின் மனைவி ஜான்சிராணி கூடல்புதூர் போலீஸில் புகார் அளித்தார். இந்த விவரம் அறிந்து கொண்ட அந்தக் குழு, அவரை விட்டுள்ளது. இதுகுறித்து, மதுரையில் ஆயுதப் படை போலீஸ்காரர் வெங்கடேசன் என்பவர் உள்ளிட்ட கும்பலிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.