எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்ய கோரிக்கை

கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக கணக்கிட்டு ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் எனும் புதிய

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:24 am

VASUDEVAN.K

நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்க பேரவைக்கூட்டம், கடலூர் கிளைத்தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் என்.அப்துல் மஜீத், பொதுச்செயலர் ஆர்.பன்னீர்செல்வம், கிளை செயலர் சி.தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக கணக்கிட்டு ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் எனும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய திட்டமே தொடர மாநில அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதோடு, ஓய்வூதியம் பெறுவோரும் அதற்குரிய பலன்களை உரிய காலத்தில் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கடலூர் பாதிரிகுப்பம் குளோரி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிக்கு சங்கத்தின் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட சத்துணவு மையத்தை மாநில தலைவர் அப்துல் மஜீத் திறந்துவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.