/

நகைகடை அதிபரிடம் 7 கிலோ தங்க நகைகள் மோசடி

மதுரை தெற்கு ஆவணி முல வீதியில் நகைகடை வைத்திருப்பவர் ஆனந்த். இவரிடம் கடந்த 6 மாதமாக தெற்கு மாசி வீதியைச் சேர்ந்த இருவர் நகைகளை ஆர்டர் கொடுத்து வாங்கி வந்தார்கள். இநிலையில் 7 கிலோ

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:23 am

ஜெயப்பாண்டி

மதுரை தெற்கு ஆவணி முல வீதியில் நகைகடை வைத்திருப்பவர் ஆனந்த். இவரிடம் கடந்த 6 மாதமாக தெற்கு மாசி வீதியைச் சேர்ந்த இருவர் நகைகளை ஆர்டர் கொடுத்து வாங்கி வந்தார்கள். இந்நிலையில் 7 கிலோ மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கிய அந்த இருவரும் திடீர் என்று தலைமறைவானார்கள்.அவர்கள் தங்கிய பகுதியில் விசாரித்தபோது வீட்டை  காலி செய்து விட்டார்கள் எனவும், அவர்கள் இருவரும் சகோதரர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கூறியிருந்ததால் அந்த பகுதியில் விசாரணை நடத்தபடும் என போலீசார் கூறினர். மோசடி செய்த நகைகளின் மதிப்பு ரூ 1 கோடி ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.