பிரசவத்துக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்டு விரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை துப்புரவுப் பணியாளர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் பழைய பஸ் நிலையம் வணிக வளாகத்தில் நடைபாதையில் வசித்து வருபவர் சாமுவேல். இவரது மனைவி லட்சுமி (27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த மற்றொரு ஆதரவற்ற பெண்ணின் உதவியுடன் மருத்துவமனைக்குச் சென்ற லட்சுமியிடம், அங்கிருந்த ஊழியர்கள் பிரசவம் பார்க்க வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.ஆனால் பணம் கொடுக்க வழியில்லாததால் வெளியேற்றப்பட்ட லட்சுமி, வணிக வளாகம் அருகேயுள்ள கழிப்பிடத்தின் பின்பகுதியில் ஆதரவற்ற பெண்ணின் உதவியுடன் குழந்தை பெற்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளிநாயகம் விசாரணை நடத்தினார். ஆனால் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் அரசு உத்தரவின் பேரில் திடீரென மருத்துவமனைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் விசாரணை நடத்தினார். சம்பவத்தின்போது உடனிருந்த செவிலியர் பயிற்சி மாணவி, துப்புரவுப் பணியாளர் ஆகியோரை ஆட்சியர் முன்னிலையில் லட்சுமி அடையாளம் காட்டினார்.அப்போது தன்னிடம் லஞ்சம் கேட்டது துப்புரவுப் பணியாளர் எஸ்.மேரி (38) என்று லட்சுமி கூறினார். இதையடுத்து மேரி மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் மேரியை தாற்காலிக பணி நீக்கம் செய்து டீன் வள்ளிநாயகம் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக டீன் தாக்கல் செய்த அறிக்கையின் பேரில் தவறிழைத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு லஞ்சம் கேட்டால் உடனடியாக மருத்துவக் கல்லூரி முதல்வரிடமோ, ஆட்சியரிடமோ தகவல் தெரிவிக்கலாம் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அதிநவீன கருவிகள் உள்ளன. மாதம்தோறும் சுமார் 400 முதல் 600 பிரசவங்கள் வரை இங்கு நடைபெறுகின்றன. அதிகளவில் குழந்தைகள் பிறக்கும் அரசு மருத்துவனைகளில் தமிழகத்திலேயே இரண்டாவது இடத்தில் சேலம் மருத்துவமனை உள்ளது.
தனக்கு நேரிட்ட கொடுமை குறித்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்ததற்காக லட்சுமி தாக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறும். அதில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். செவிலியர்கள் தங்களுக்கே உரிய சகிப்புத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

