விருதுநகர்-அழகாபுரி சாலையில் வாகன விபத்துக்களை ஏற்படுத்தும் தடுப்புச் சுவர் இல்லாத பாலங்களை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்களிடையே புகார் எழுந்துள்ளது.
விருதுநகர்-அழகாபுரிக்கு வரையில் இச்சாலை முக்கிய போக்குவரத்து இணைப்பு சாலையாக இருந்து வருகிறது. இக்குறிப்பிட்ட சாலை மதுரை-செங்கோட்டை சாலை, பேரையூர்-தேனி சாலை, சிவகாசி, வத்திராயிருப்பு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் இணைப்புச் சாலையாக உள்ளது. இச்சாலையில் நாள்தோறும் அரசு பேருந்துகள், சரக்கு என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.
இக்குறிப்பிட்ட சாலையில் சிறு ஓடைகளின் குறுக்கே சிறிய அளவிலான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இப்பாலங்கள் தரமாக கட்டப்படாததால் இரவு நேரங்களில் வேகமாக வரும் வானங்கள் மோதி தடுப்புச் சுவர்கள் உடைந்து காணப்படுகிறது. அதோடு, இச்சாலைப்பகுதியில் களிமண் தரையாக இருப்பதால் சாலையின் நடுப்பகுதிகளில் செங்குன்றாபுரம், எல்கைப்பட்டி ஆகிய பகுதிகளில் பாலப் பகுதியில் இதேபோல் திடீர் பள்ளங்கள் உருவாகியுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலையேற்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களிலிருந்து வருகிற வாகன ஓட்டுநர்களுக்கு இச்சாலையின் தன்மை, எங்கு பாலம் உள்ளது என்பது போன்ற விவரங்கள் தெரியாததால் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல், இருசக்கர வாகனங்களில் வருகின்றவர்கள் பாலச் சுவர் இல்லாததால் ஓரமாக வந்து பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றனர் என வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கணேசன் கூறுகையில், இச்சாலைப் பகுதி பாலங்களில் வாகன விபத்துக்களால் சேதமடைந்து காணப்படுகிறது. இதற்கு முன்பு வரையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து, தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டுக்கு மாறியுள்ளது. அதோடு, விருதுநகர்-வத்திராயிருப்பு வரையில் செல்லும் 37 கி.மீ சாலையையும் அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதில், சிறியளவிலான பாலங்கள் அனைத்தும் அகற்றம் செய்யப்பட்டு பெரிய அளவிலான பாலம் மற்றும் நெகிழ்வு தன்மையோடு காணப்படும் சாலையோர களிமண் தரையை பலப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

