மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

சேலம், செப். 13: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.  ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள சென்னகிரியைச் சேர்ந்தவர் ம.திருமு

Updated On :26 செப்டம்பர் 2012, 6:23 am

சேலம், செப். 13: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

 ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள சென்னகிரியைச் சேர்ந்தவர் ம.திருமுருகன் (23), விசைத்தறித் தொழிலாளி. இவர் கடந்த 3-ம் தேதி சென்னகிரியில் இருந்து ஆட்டையாம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சைக்கிளில் சென்ற செந்தில் என்பவரது மகனும் மாணவருமான விக்னேஷ் (12) மீது மோதியுள்ளார்.

 இது குறித்து விக்னேஷின் தந்தை செந்தில் ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலனிடம் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய பூபாலன், பைக்கில் சென்று மோதியதாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்படி திருமுருகனிடம் கேட்டுள்ளார்.

 இதையடுத்து திருமுருகன் ஆயிரம் ரூபாயை உடனடியாகக் கொடுத்துள்ளார். மேலும் ரூ.4 ஆயிரத்தைக் கேட்டு பூபாலன் அடிக்கடி தொந்தரவு அளித்து வந்தாராம்.  இருப்பினும் மேலும் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுக்க விரும்பாத திருமுருகன், இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சந்திரமௌலியிடம் புகார் தெரிவித்தார்.

 இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரையின்படி இன்று மாலை காவல் நிலையம் சென்ற திருமுருகன், இன்ஸ்பெக்டர் பூபாலனிடம் லஞ்சப் பணம் ரூ.4 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது திடீரென காவல் நிலையத்துக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், பூபாலனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.