டெங்கு: மதுரை மருத்துவமனையில் சுகாதார உயர் மட்டக் குழு ஆய்வு
மதுரை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்களைக் கண்டறியவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுகாதார உயர்மட்டக் குழு இன்று


மதுரை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்களைக் கண்டறியவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுகாதார உயர்மட்டக் குழு இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. முன்னதாக இது தொடர்பாக ஆய்வுக் குழுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசுச் செயலர் ராமநாதன், தலைமை வகித்து, கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அப்போது அவர்,
மதுரை மாவட்டத்தில் இன்றுவரை டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் பரவுவதற்குக் காரணமான கொசுக்களை ஒழிக்கவும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி பரவலாக நடக்க வேண்டும். மக்கள் மத்தியில் பீதி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.
இதன் பின்னர் ராமநாதன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மதுரை மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமித்து அனைத்து பகுதியிலும் மருந்து தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் நிதியும் அரசால் ஒதுக்கப்படும். அரசு மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றில் டெங்கு காய்ச்சலுக்கான அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தேவையான அளவு உள்ளது. அவரவர் விரும்பிய முறைகளில் மருத்துவ சிகிச்சை பெறலாம்- என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...