/

மதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை மாயம்

மதுரை அரசு பொது மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று மாயமானது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:44 pm

ஜெயப்பாண்டி

மதுரை அரசு பொது மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று மாயமானது.

சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள கீழகண்தனி ஊரைச் சேர்ந்தவர் ராதிகா. இவருக்கு கடந்த 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இன்று காலை 10.30 மணி முதல் திடீரென 10.30 அந்தக் குழந்தையைக் காணவில்லை. இது தொடர்பாக ராதிகா மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் செய்தார். இதைஅடுத்து

போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக, இது போன்ற குழந்தைத் திருட்டுகள் இங்கே ஓரிரு முறை முன்னர் நிகழ்ந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் சரிவர வேலை செய்யவில்லை. இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் பெரும் சிரமம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.